[ராகம் -- ஹிந்துஸ்தானி's image
0237

[ராகம் -- ஹிந்துஸ்தானி

ShareBookmarks

[ராகம் -- ஹிந்துஸ்தானி பியாக்] [தாளம் - ஆதி]

பல்லவி

வந்தே - மாதரம் - ஜய
வந்தே மாதரம்.

சரணங்கள்

ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)

ஆரிய பூமியில் நாரிய ரும் நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)

நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)

ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம் (வந்தே

Read More! Learn More!

Sootradhar