கத்தியின்றி ரத்தமின்றி's image
0431

கத்தியின்றி ரத்தமின்றி

ShareBookmarks

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும்யாரும் சேருவீர் (கத்)
ஒண்டி அண்டிக்f குண்டுவிட்டு
உயிர்பறித்த லின்றியே
மண்டலத்தில் கண்டிலாத சண்டை
யொன்று புதுமையே (கத்)
குதிரையில்லை யானையில்லை
கொல்லும் ஆசையில்லையே
எதிரியென்று யாருமில்லை
ஏற்றும் ஆசையில்லதாய் (கத்)
கோபமில்லை தாபமில்லை
சாபங்கூறல் இல்லையே
பாபமான செய்கை யொன்றும்
பண்ணுமாசை யின்fறியே (கத்).....

Read More! Learn More!

Sootradhar