இயற்கை கட்டளை's image
401K

இயற்கை கட்டளை

இயற்கை கட்டளை 



இயற்கை ஆற்றல் எண்ணற் கரிதென 

ஏக்கம் கொண்டு தூக்கம் இன்றி 

ஆய்வினைத் தேடி அலையும் மக்கள் 

அடக்கம் பெற்றவர் ஆயிரம் கோடி 

அமைதித் தேடி அலைந்து திரிந்து 

அன்பே சிவமென அடங்கி ஒடுங்கி 

இன்பம் கண்டவர் இறைவன் ஆனது 

எங்கும் காண்க எத்தனை வேற்றுமை 

புத்தர் சமணர் நபிகள் ஏசென 

இறைவனைத் தேடினோர் இறைவன் ஆனதால் 

ஒற்றுமை குலைந்து வேற்றுமைத் தேடி 

திரியும் மக்கள் ஒற்றுமை காண 

Read More! Earn More! Learn More!