Poetry 1 min read 54.1K reads

இறைவனைக் காண்க


இறைவனைக் காண இதுதானே நேரம்பறைசாற்றும் மாந்தர் பகர்ந்தால் - நிறைந்தகொடையாளர் ஈந்துவக்கும் காலத்தில் ஏழைபடைக்கும் சிரிப்பினில் பார்!

பெருவெளி தன்னில் சிறுவழி தேடிஉருவம் வளர்த்தவன் புன்கண் - அருவமதைக்காணுமோ கற்றலில் காணலாகா உள்ளத்தில்பேணுவதில் உண்டாம் இறை!

யாத்திரைக் கப்பல் நடுக்கடலில் தத்தளிக்கநாத்திகம் பேசுவோன் நாவுமே - கூத்தாடும்ஏத்தி வழிபட்டே காப்போர்க்கால் வீழ்ந்தெழும்கூத்திலும் உண்டே இறை!

Read more Earn more Learn more