ஏதடா சாதி
ஏதடா சாதி ஏனடா பூசல்
தீதடா கோபம் தீராத வன்மம்
வற்றா ஊற்றாய் தொற்று நோய்போல்
பற்றிடின் நாளும் பதட்டம் நிலைபெறும்
குற்றச் செயலில் குடிகெடும் அன்று
சுற்றம் நழுவும் சூது கவ்வும்
சாதியை வைத்து சாதிப் பதென்ன
நீதி அங்கே இருட்டறை காட்டும்
மனிதருள் மனிதன் வேற்றுமை யற்று
இனிவரும் காலம் ஒற்றுமைப் பட்டே
கற்றக் கல்வியால் கடமை ஆற்றின்
பற்றிய சாதி பறந்திடக் காண்போம்
நீர் அதை பிடித்திடும் பிடியால்
தேரது சுற்றி வந்திடும் நிற்கும் .
