அதி அற்புத தெய்வீக பாரதி's image
91K

அதி அற்புத தெய்வீக பாரதி

அந்த ஆங்கிலேய நரி,

சுதந்திரத்திற்கு எதிரி,

கொண்டான் நிர்வாக வெறி,

எதிர்த்தது இவன் கவிதை வரி!


எங்கும் ஆங்கிலேய ஆதிக்கம்,

அவன் பலத்தின் பெருக்கம்,

மகாகவி மனதில் துக்கம்,

வாட்டியது சுதந்திர ஏக்கம்!


எதிலும் ஆங்கிலேயன் முதல்,

தேவை அவனோடு மோதல்,

தொழிலோ பாடல் செய்தல்,

பாடலை அம்பாய் எய்தல்!


உதவி செய்தாள் செந்தமிழ்,

வந்தது பத்திரிகை இதழ்,

எழுதினான், "ஆட்சியை கவிழ்"

பெற்றான் கவிஞன் புகழ்!

-

அந்த ஆங்கிலேயன் நடுநடுங்க,

முயல இவன் சுதந்திரம் பிடுங்க,

தலைவர்கள் இவனை வணங்க,

ஆங்கிலேயன் பயந்தான் உறங்க!


பேனாவே இவன் துப்பாக்கி,

சுட்டான் எதிரியை நோக்கி,

Read More! Earn More! Learn More!